Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அடுத்த காவு வாங்கிய வெள்ளியங்கிரி: 7வது மலையில் இருந்து கீழே விழுந்த பக்தர் : காத்திருந்த அதிர்ச்சி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 23, 2024
in Default
0
அடுத்த காவு வாங்கிய வெள்ளியங்கிரி: 7வது மலையில் இருந்து கீழே விழுந்த பக்தர் : காத்திருந்த அதிர்ச்சி!
29
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18 ம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி. காலணி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், தனது நணபர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். ஏழு மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் அவரது வயிறு மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் மீட்டு கோவில் நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

பின்னர் சுமை தூக்கும் பணியாளர்கள் அவரை மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூகம் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீரகுமார், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வீரக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

”இந்து தாய்மார்களின் தாலியை கூட காங்கிரஸ் பறித்துவிடும்”-பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு: பதிலளிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Next Post

இன்றளவும் தீராத ஜாதிவெறி: ஆணவக் கொலை செய்யப்பட்ட கணவன்: 10 நாட்களாக போராடிய மனைவி : சிக்கிய கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்றளவும் தீராத ஜாதிவெறி: ஆணவக் கொலை செய்யப்பட்ட கணவன்: 10 நாட்களாக போராடிய மனைவி : சிக்கிய கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!

இன்றளவும் தீராத ஜாதிவெறி: ஆணவக் கொலை செய்யப்பட்ட கணவன்: 10 நாட்களாக போராடிய மனைவி : சிக்கிய கடிதத்தில் அதிர்ச்சி தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In