Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 19, 2024
in Default
1
விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
43
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: விஜய் யாருக்கு ஓட்டு போடுகிறார் என போட்டோ எடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தல் மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்தல் முதல் கட்டமாகவே தமிழகம், புதுவையில் இன்று நடக்கிறது.

Will Election Commission take action against policeman who took photo of Vijay while casting vote


இந்த தேர்தலில் காலை முதல் ஆளாக வந்து வாக்களித்தார் நடிகர் அஜித். அவர் திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் அரைமணி நேரமாக காத்திருந்துவிட்டு வாக்களித்துவிட்டு சென்றார். அவரை போல் நிறைய பிரபலங்கள் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு குவிந்தனர்.

கோட் படப்பிடிப்புக்காக துபாய் சென்றிருந்த விஜய், அங்கு தொடர் மழையால் விமானங்கள் ரத்தாகியுள்ள நிலையில் அவர் தமிழக லோக்சபா தேர்தலுக்கு வாக்களிக்க வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. எனினும் இன்று துபாயில் நிலைமை சீரானதை அடுத்து அவர் சென்னைக்கு வந்துவிட்டார்.

இதையடுத்து அவர் நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு சென்றார். அங்கு அவரை புகைப்படம் , வீடியோ எடுக்க நிறைய மீடியா புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்தனர். அவர் யாரெல்லாம் வேட்பாளர்கள் என்பதை ஒரு பார்வை பார்த்தார். அவரை சுற்றி கேமரா இருந்ததால் அவர் வாக்கு பதிவு செய்யவிருந்த இயந்திரம் நன்றாகவே தெரிந்தது.

நல்ல வேளையாக அங்கு ஒரு போலீஸ்காரர் வந்து வீடியோ எடுத்த மீடியாக்காரர்களை அப்புறப்படுத்தினார். இல்லாவிட்டால் விஜய் யாருக்கு ஓட்டு போட்டார், எந்த வேட்பாளருக்கு நேராக சிகப்பு விளக்கு எரிந்தது என்பது உலகத்திற்கே தெரிந்திருக்கும். மீடியாக்காரர்களை அப்புறப்படுத்திய நிலையில் வேறு ஒரு போலீஸ்காரர் விஜய் வாக்களித்ததை தனது செல்போனில் பதிவு செய்தார்.

இது முற்றிலும் தவறு. ஒரு குடிமகன் யாருக்கு வாக்களித்தார் என்பதை யாருக்கும் சொல்ல தேவையில்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு உள்பட்டது. யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை உறவினர்களிடம் கூட சொல்ல தயங்கும் அளவுக்கு பர்சனலான விஷயம்! ஆனால் விஜய் யாருக்கு வாக்களித்தார் என்பதை அந்த போலீஸ்காரர் எதற்காக படம் பிடித்தார் என தெரியவில்லை. அவர் ஒரு வேளை உளவுத் துறையை சேர்ந்தவராகவே இருந்தாலும் இது மிகவும் தவறான செயல். எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Previous Post

மலையாள படத்திலும் தடம் பதிக்கப்போகும் முன்னாள் கிளுகிளு நடிகை..

Next Post

ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு – சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு – சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!

ஜனநாயக திருவிழா! தமிழ்நாட்டில் முடிந்தது வாக்குப்பதிவு - சீலிடப்படும் வாக்கு இயந்திரங்கள்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In