தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை 10 லட்சத்துக்கு மேற்பட்ட முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

தர்மபுரியில் 67.52 சதவீதம், நாமக்கல்லில் 67.37 சதவீதம், ஆரணியில் 67.34%, கள்ளக்குறிச்சியில் 67.23 சதவீதம் , கரூரில் 66.91%, சிதம்பரத்தில் 66.64 சதவீதம் , பெரம்பலூரில் 66.56 சதவீதம், திருவண்ணாமலையில் 65 91%, சேலத்தில் 65.86 சதவீதம் , அரக்கோணத்தில் 65.67% , வேலூரில் 65 12 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதேபோல காஞ்சிபுரத்தில் 61.74 சதவீதமும், திருவள்ளூரில் 61.59 சதவீதமும், கோயம்புத்தூரில் 61.45 சதவீதமும், திருப்பூரில் 61.43 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. வடசென்னையில் 59.16 சதவீதமும், மத்திய சென்னையில் 57.25%, தென் சென்னையில் 57.04 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை