தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்
இதற்காக கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ₹9,000 கோடி ஒப்பந்தம் செய்தது டாடா மோட்டார்ஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி ராணிப்பேட்டையில் ஆலை அமைக்கிறது டாடா மோட்டார்ஸ்
ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபண்டர் போன்ற உயர் ரக சொகுசு கார்கள் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட உள்ளன
ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை
தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஜே.எல்.ஆர். கார்கள் பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகின்றன
ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை தமிழ்நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டம்
படிப்படியாக உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது
தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டம்
டாடா மோட்டார்ஸ் ஆலை மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு கணிசமான ஊதியத்துடன் கூடிய தரமான வேலை கிடைக்கும்
