Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வாக்கு சேகரிப்பதற்காக 8-வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 15, 2024
in Default
1
வாக்கு சேகரிப்பதற்காக 8-வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்..
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார்.  நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு தமிழ்நாட்டுக்கு  பிரதமர் மோடியின் வருகை எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

இந்த வகையில் இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

வாக்கு சேகரிப்பதற்காக 8-வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடக்க இருக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4:10 மணிக்கு அகஸ்தியர்பட்டிக்கு வரவுள்ளார். மாலை 4:20 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறும் கூட்டத்தில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதே போல, காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கே இன்று புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் தொகுதிகளிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மற்றும் வட சென்னை தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரம், மத்திய சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகளில் இன்று வாக்கு சேகரிக்கவுள்ளார்.

Previous Post

ரூ.4 கோடி பணம் நயினார் நாகேந்திரனுடையது: வெளியானது முதல் தகவல் அறிக்கை..! சிக்கலில் பாஜக வேட்பாளர்..!

Next Post

கச்சத்தீவு மீட்பு.. ஒரு வார்த்தை கூட இடம்பெறாத பாஜக தேர்தல் அறிக்கை.. தமிழக கூட்டணி கட்சிகள் அதிருப்தி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கச்சத்தீவு மீட்பு.. ஒரு வார்த்தை கூட இடம்பெறாத பாஜக தேர்தல் அறிக்கை.. தமிழக கூட்டணி கட்சிகள் அதிருப்தி

கச்சத்தீவு மீட்பு.. ஒரு வார்த்தை கூட இடம்பெறாத பாஜக தேர்தல் அறிக்கை.. தமிழக கூட்டணி கட்சிகள் அதிருப்தி

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In