தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த குணச்சித்திர நடிகர் அருள்மணி(65) மாரடைப்பால் வியாழக்கிழமை சென்னையில் காலமானார்.
அதிமுகவிற்கு ஆதரவாக கடந்த பத்து நாள்களாக தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வந்த அருள்மணி, சென்னை திரும்பிய நிலையில் திடீர் மாரடைப்பால் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
தமிழில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் அருள்மணி, அரசியல் மேடை, இயக்குநர் பயிற்சி பள்ளி என பல பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
அழகி, தென்றல், தாண்டவகோனே போன்ற பல்வேறு திரைப்படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர், அதிமுகவில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அவருடைய மரணத்துக்காக வருத்தப்படுகிறேன் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்