
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், அவ்வழியாக வந்த கார் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை செய்தனர். அப்போது நடிகை மஞ்சு வாரியர் அவ்வழியாக தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, அவரது காரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அந்த காரை சோதனையிட்டனர். அதன்பின் அவர் செல்ல அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனிடையே, அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் காரில் மஞ்சு வாரியர் இருப்பதை அடையாளம் கண்டு கொண்டதால், அவருடன் செல்ஃபி புகைப்படம் எடுப்பதையும் காண முடிந்தது.
