தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படும் மதுபானங்கள், போதைப் பொருள்கள், பரிசுப் பொருள்களையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல இருந்த ரூ. 4 கோடி பணம் பிடிபட்டது.
மேலும், பணத்துடன் பிடிப்பட்ட 3 பேரையும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
