Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாஜகவுக்கு விழும் பெரிய அடி: லீக்கான சீக்ரெட் சர்வே? அப்போ எல்லாமே பில்டப் தானா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 5, 2024
in Default
1
பாஜகவுக்கு விழும் பெரிய அடி: லீக்கான சீக்ரெட் சர்வே? அப்போ எல்லாமே பில்டப் தானா?
79
SHARES
128
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெறும், எந்த கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வட இந்திய ஊடகங்கள் பலவற்றில் பாஜகவே மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

400 இடங்களில் வெல்வோம் என்று மோடி கூறிவரும் நிலையில் அதையே பிரதிபலிக்கும் வகையில் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வந்தன. ஆனால் களநிலவரம் பாஜகவுக்கு அவ்வளவு சாதகமாக இல்லை என்றும், மிகக் கடுமையான போட்டியை இந்தியா கூட்டணி அளிக்கும் என்றும் அதுமட்டுமல்லாமல் இந்தியா கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் சீக்ரெட் சர்வே ஒன்று எடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த ரிப்போர்ட் தான் பாஜகவின் ஆட்சி கனவை கலைக்கும் படி இருந்துள்ளதாம். தென் மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு முழு எதிர்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளதாம். கர்நாடகாவில் கூட எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதாம்.

உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தான் பாஜகவை காப்பாற்ற உள்ள மாநிலங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த முறை பெற்ற இடங்கள் இந்த முறை கிடைக்காது என்றும் அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.


உதாரணமாக உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 இடங்களில் பாஜகவுக்கு 56 இடங்களே கிடைக்கும் என்றும், குஜராத்தில் 23 இடங்கள், பீகாரில் 22, மத்திய பிரதேசத்தில் 25 இடங்கள், ராஜஸ்தானில் 14 இடங்கள், மகாராஷ்டிராவில் 20 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கும் என்று அந்த சீக்ரெட் சர்வே சொல்கிறதாம்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு 38 இடங்கள் கிடைக்கும் என்றும், பாஜக கூட்டணிக்கு ஒரு இடம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பாஜக தனித்து 217 இடங்களிலும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் 44 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனித்து 135 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியினர் 145 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

இந்தியா கூட்டணி 280 இடங்களில் வெற்றி பெறும் என்ற சர்வே முடிவு பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். எனவே தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தவும், தேர்தல் வியூகங்களை வலுவாக முன்னெடுக்கவும் கட்சியினருக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.

Previous Post

ஜெகத்ரட்சகனுக்கு கருப்புக்கொடி காட்டிய திமுகவினர்..நடந்தது என்ன?

Next Post

பீதியில் முக்கிய கட்சிகள்; துணை மேயர் வீடு உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பீதியில் முக்கிய கட்சிகள்; துணை மேயர் வீடு உட்பட 40க்கும் மேற்பட்ட  இடங்களில் வருமான வரித் துறை சோதனை..

பீதியில் முக்கிய கட்சிகள்; துணை மேயர் வீடு உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    பாஜக கட்சியானது வடமாநிலங்களில் ரவுடி பயலுகளை எல்லாம் சேர்த்து அரசியலுக்கு வர வைத்து வட மாநிலங்களை நாசப்படுத்தியது அதேபோன்று தமிழகத்திலும் இருக்கும் பெரிய ரவுடி பயலுகளை எல்லாம் கட்சியில் சேர்த்து இருக்கிறது இதனால் கண்டிப்பாக இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கண்டிப்பாக வெற்றி பெறாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In