வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விஜயநல்லூர் அருகே செங்குன்றம் போக்குவரத்துகாவல் ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையிலான காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, குஜராத் மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று வேகமாக நிற்காமல் சென்றதால் அதனை மடக்கி பிடிக்க முயன்ற போது, வேகமாக சென்று தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது காரில் இருந்த 2 பேர் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சிறுபாலத்தில் இருந்து கீழே குதி்த்து தப்பி ஓடினர்.அவர்களை போலீஸ்விரட்டி சென்ற போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தனர்.இதனையடுத்து சாலையில் நிறுத்தப்பட்ட காரின் சாவியை எடுத்து கொண்டு தப்பிய நிலையில், கிரேன் மூலம் சாலையின் நடுவில் நிறுத்தப்பட்ட காரை அப்புறப்படுத்திய போலீஸ், காரை திறந்து ஆய்வு செய்த போது பண்டல் பண்டலாக சுமார் 2 டன் அளவில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காரையும் குட்காவையும் சோழவரம் காவல் நிலையம் எடுத்து சென்ற காவல் துறையினர், தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் செங்குன்றம் மாவட்டகாவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் செங்குன்றம் மாவட்டம் காவல்இணை ஆணையர் ராஜா ராபர்ட் சோழவரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராஜ்குமார்சம்பவ இடத்துக்கு சென்றுஆய்வு செய்து தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


இந்த நேரத்தில் ஆவது போதைப்பொருள் குட்காவை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தார்களே நம் போலீசார் காவல்துறைக்கு எனது வாழ்த்துக்கள்