ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் 18 வயது தலித் கூட்டு பலாத்காரம் செய்யப்பட பெண்ணை நீதிமன்றத்தில் தனது காயங்களைக் காட்டுவதற்காக ஆடைகளை அவிழ்க்க சொன்னதாக ஒரு மாஜிஸ்திரேட் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் (எஸ்டி-எஸ்சி) செல் மினா மீனா கூறுகையில், கூட்டு பலாத்காரம் செய்யப்பட பெண்ணை மார்ச் 30 அன்று ஹிண்டவுன் நீதிமன்ற மாஜிஸ்திரேட் “தனது காயங்களைப் பார்ப்பதற்காக ஆடைகளை அவிழ்க்க சொன்னார்” என்று புகார் அளித்ததாகக் கூறினார்.
“அந்தப்பெண் ஆடையை அவிழ்க்க மறுத்துவிட்டார், நீதிமன்றத்தில் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பிறகு, மாஜிஸ்திரேட்டுக்கு எதிராக புகார் பதிவு செய்தார். நாகரீகத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார் மீனா.
பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிரிவு 345 (தவறான சிறைவாசம்) ஆகியவற்றின் கீழ் மாஜிஸ்திரேட் மீது வழக்கு பதிவுசெய்யப்படுள்ளது என்று மீனா கூறினார்.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “இந்த வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் விஜிலென்ஸ் பதிவாளர் அஜய் சிங் ஜாட் தலைமையிலான குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளது, அவர் புதன்கிழமை கரௌலியில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட பெண்ணை சந்தித்து வாக்குமூலம் பதிவு செய்தார்,” என்று அவர் கூறினார்.
பலமுறை முயற்சித்த போதிலும், குற்றம் சாட்டப்பட்ட மாஜிஸ்திரேட்டை எந்த பத்திரிக்கையாளரும் அணுக முடியவில்லை.
காவல்துறையின் கூற்றுப்படி, மார்ச் 19 அன்று மூன்று ஆண்களால் அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
20-22 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள், பெற்றோர் இல்லாத நேரத்தில், மாலையில் அந்தப் பெண்ணை அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்று, அவர்களது சொந்த வீடுக்கு கும்பல் அழைத்துச் சென்றதாக ஹிண்டவுன் நகர காவல்துறை துணை ஆணையர் (டிஎஸ்பி) கிரிதிஹாரி லால் தெரிவித்தார். அங்கு அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.
மூன்று பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (கற்பழிப்பு) மற்றும் 376 டி (கும்பல் பலாத்காரம்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது மற்றும் இந்த விவகாரம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) மார்ச் 27 அன்று ஹிந்தவுன் சதர் காவல் நிலையத்தில் நீதிமன்ற பரிந்துரை மூலம் பதிவு செய்யப்பட்டது.
டிஎஸ்பியின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் சம்பவத்திலிருந்து தலைமறைவாக உள்ளனர். “எங்கள் குழு குற்றவாளிகளைத் தேடிவருகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்றார்.

கற்பழிப்பு கூட்டு பலாத்காரம் போன்ற சம்பவங்களில் மாஜிஸ்ட்ரேட் என்பவருக்கு வழக்கு பதிவு செய்யவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை ஏற்றுக் கொள்வதற்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது சம்பந்தப்பட்ட மகிளா கோர்ட் அல்லது மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து அனுப்பி விட வேண்டும் அவர்கள் அந்த வழக்கை இன் கேமரா கோர்ட் முறையில் விசாரிப்பார்கள் இன் கேமரா கோர்ட் என்பது வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை மட்டும் நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு கதவு ஜன்னல்கள் அனைத்தையும் மூடிவிட்டு விசாரிப்பது அல்லது நீதிபதியின் அறையில் வழக்கின் சம்பந்தப்பட்ட நபர்களை மட்டுமே வைத்துக் கொண்டு விசாரிப்பதே இன் கேமரா கோர்ட் முறையாகும் அந்த இன் கேமரா கோர்ட் அதிகாரம் பாதி ஸ்டேட் நீதிமன்றத்திற்கு கிடையாது மேலும் காயங்களை பார்ப்பதற்கு பெண் மருத்துவர்கள் அழைத்து பார்க்கச் சொல்வார்கள் அவர்கள் தரும் அறிக்கையின் படியே விசாரணை தொடரும் நீதிபதியே பெண்ணின் உடலில் உள்ள காயங்களை நேரடியாக பார்க்கும் அதிகாரம் எந்த ஒரு நீதிபதிக்கும் கிடையாது அதாவது அந்தரங்க உறுப்புகளை பார்க்கும் அதிகாரம் கிடையாது ஆனால் கை கால்கள் தலை போன்ற சாதாரண இடங்களில் உள்ள காயங்களை பார்க்கலாம் இந்த சம்பவத்தில் மாஜிஸ்ட்ரேட் தனது அதிகாரத்தை மீறி உள்ளார் எனவே மாஜிஸ்ட்ரேட் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்