தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதே சமயம் தேர்தல் விதிகளும் அமலில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சேலம் அருகே தாரமங்கலம் அதிமுக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியத்தின் வீடு மற்றும் நகைக் கடையில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, பாலசுப்பிரமணியம் வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கம், தங்கக் கட்டிகள் மற்றும் ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று சென்னையில் உள்ள ஆளுங்கட்சி அதாவது திமுக வினரின் அதாவது குறைந்தபட்சம் பகுதி செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் வீட்டில் இதுபோன்று வருமான வரி துறையினர் சோதனை இட்டால் ஏராளமான பணங்களும் தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யலாம்