Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

CBI, ED எல்லாம் ஜுஜுபி.. ஜெயில் கட்டி வச்சதே எங்களுக்காக தான்.. செல்லூர் ராஜு அதிரடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 2, 2024
in Default
0
CBI, ED எல்லாம் ஜுஜுபி.. ஜெயில் கட்டி வச்சதே எங்களுக்காக தான்.. செல்லூர் ராஜு அதிரடி
29
SHARES
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: “சிபிஐ, அமலாக்கத்துறை எல்லாம் எங்களுக்கு ஜுஜுபி.. இதை எல்லாம் பார்த்து பயப்படுற ஆளுங்களா நாங்க? ஜெயில் கட்சி வெச்சதே எங்க சமுதாயத்துக்காக தான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். பாஜகவை விமர்சிக்கும் வகையில் செல்லூர் ராஜு இவ்வாறு கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருகாலத்தில் அதிமுக – பாஜக ஒரே கூட்டணியில் இருந்த போது, அவ்வப்போது அதிமுகவை சீண்டுவதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலர் வழக்கமாக கொண்டிருந்தனர். ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று சொன்னது முதல் அதிமுகவின் ஊழல் அறிக்கையை வெளியிடுவோம் என்று கூறியது வரை அதிமுகவை கிடைக்கிற கேப்பில் எல்லாம் சீண்டினார் அண்ணாமலை. ஆனால், அதை கண்டும் காணாதுமாக இருந்தது. ஆனால், ஒருகட்டத்தில் அண்ணாமலையின் சீண்டல் அதிகமாகவே கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுக.

கூட்டணி முறிந்தது முதலாக அதிமுகவின் சில தலைவர்கள், அண்ணாமலையையும், பாஜகவையும் மிக இழிவாக பேசத் தொடங்கினர். அதில் முக்கியமானவர் செல்லூர் ராஜு. அண்ணாமலையை வாடா போடா என்று இவர் மேடைகளில் பேசிய பேச்சுகள், இன்றளவும் சமூக வலைதளங்கில் டிரெண்டாக இருக்கிறது. இந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பாஜகவை புரட்டி எடுத்து வருகின்றனர். இப்போது கச்சத்தீவு விவகாரம் பூதாகரமான நிலையில், இதை வைத்தும் பாஜகவை செல்லூர் ராஜு விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த செல்லூர் ராஜுவிடம், “பாஜகவை எதிர்த்தால் அமலாக்கத்துறை வந்துவிடும் என்று சொல்கிறார்களே.. அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “எங்களுக்கு எல்லாம் மடியில் பணம் இல்லை.. அதனால் வழியிலும் பயம் இல்லை. இன்னொன்னும் சொல்லட்டுமா? ஜெயில் கட்டப்பட்டதே எங்களுக்காக தான். எங்களை மனதில் வைத்து தான் வாய்ப்பூட்டு சட்டம் போன்ற சட்டங்களை வெள்ளைக்காரனே கொண்டு வந்தான். எங்க சமுதாயம் அப்படிப்பட்டது.

அதனால் இதெல்லாம் ஜுஜுபி எங்களுக்கு. மதுரையில் அழகிரியை எதிர்த்தே அரசியல் செய்தவன் நான். எவ்வளவு பெரிய ஜாம்பவனாக இருந்தாரு. அழகிரி கூட இருந்தவர்கள் எல்லாம் அந்த சமயத்தில் ஆ ஊனு சொல்வானுங்க. அவனுங்களையே போடா.. நாங்களே பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்னு சொல்லி அரசியல் செய்தவன் நான். அதுக்கே நாங்க பயப்படாதவங்க. இவங்களுக்கு எல்லாம் பயப்படுவோமோ ஜுஜுபி” என செல்லூர் ராஜு கூறினார்.

Previous Post

லடாக் முதல் அருணாசல் வரையில் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது : ஏன் மோடி அமைதி..?

Next Post

33 ஆண்டுகளாக எம்பி : நாளை ஓய்வு பெறுகிறார் பொருளாதார நிபுணர்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
33 ஆண்டுகளாக எம்பி : நாளை ஓய்வு பெறுகிறார் பொருளாதார நிபுணர்..

33 ஆண்டுகளாக எம்பி : நாளை ஓய்வு பெறுகிறார் பொருளாதார நிபுணர்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In