’என் இலக்கே 2047 தான்..’ அமலாக்கத்துறை முதல் அதிமுக வரை என்ற தலைப்பில் பிரதமர் மோடி அவர்கள் தந்தி டிவிக்கு நேற்று பேட்டி அளித்திருந்தார், அதில் “ஒரு நல்ல ஜாதி பின்னணியும் அண்ணாமலைக்கு இருக்கு ” என்று கூறும் பகுதி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு நாட்டின் பிரதமர் இப்படி ஜாதிகளை குறித்தும், ஒருவர் நல்ல ஜாதியில் இருந்து வந்திருக்கிறார், நல்ல ஜாதி பின்னணியுடன் பிஜபிக்கு வந்திருக்கிறார் என்று கூறியிருப்பதும், அண்ணாமலையில் ஜாதி நல்ல ஜாதி என்றால் மற்ற ஜாதிகள் மோசமா? என குறை கூறுவது போல் கூறியுள்ளது மக்கள் மத்தில் சர்ச்சைக்குரிய விவாதமாகியுள்ளது.
