கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் மையனூர் அருகே சிங்கார தோப்பு பகுதியே சேர்ந்த முனியப்பன் மகன் இருதயராஜ் வயது 40 இவர் பால் ஸ்டோர் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்து வருகிறார். மையனூர் கிராமத்தில் உள்ள கிருத்துவ ஆலயத்திற்கு புனித வெள்ளி இரவு பூஜையில் கலந்து கொண்டு இரவு 2 மணி அளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ திறந்து 10 பவுன் நகை காணாமல் போய் இருந்தது. அதனைக் கண்டு பகண்டைக் கூட்டுச்சாலை காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments