Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற பணமதிப்பிழப்பு ஒரு நல்ல வழி என்று முன்பு நானும் நினைத்தேன்..! ஆனால் நடந்ததோ… நீதிபதி மனம்திறப்பு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 31, 2024
in Default
1
கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற பணமதிப்பிழப்பு ஒரு நல்ல வழி என்று முன்பு நானும் நினைத்தேன்..! ஆனால் நடந்ததோ… நீதிபதி மனம்திறப்பு.
85
SHARES
137
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஐதராபாத்தில் உள்ள தனியார் சட்டப் பல்கலைக்கழகத்தில், கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் நீதிபதி பி.வி.நாகரத்னா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “2016-ஆம் ஆண்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவிகித நோட்டுகள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 2016-இல் அவசர அவசரமாக செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அப்போதைய நிதி அமைச்சருக்குக்கூடத் தெரியாது என்கிறார்கள் சிலர்.

புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 86 சதவிகிதம் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது கண்மூடித்தனமானது. புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 நோட்டுகளில் 98 சதவிகிதம் திரும்ப வந்துவிட்டதால் அதன் பிறகான வருமானவரி நடவடிக்கைகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. மேலும் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற பணமதிப்பிழப்பு, ஒரு நல்ல வழி என்று முன்பு நானும் நினைத்திருந்தேன்; ஆனால் அது செயல்படுத்தப்பட்ட பிறகு அந்த நோக்கம் என்ன ஆனது என்பதே தெரியவில்லை. பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அதுதொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு தந்தேன்” என்றார்.

பி.வி.நாகர்த்னா

’ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும்’ – பி.வி.நாகரத்னா

தொடர்ந்து பேசிய அவர், “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாலும், அவர்களின் பிற நடவடிக்கைகளினாலும், உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆளுநர்கள் முக்கிய பேசுபொருளாக இருக்கின்றனர். அரசியலமைப்பின்படி, இது ஆரோக்கியமான போக்கு அல்ல. ஆளுநர் பதவி என்பது முக்கியமான அரசியலமைப்பு பதவியாகும். ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட்டால்தான் இப்படியான வழக்குகள் குறையும்” என விமர்சித்தார்.

முன்னதாக 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இவ்வழக்கின் இறுதி விசாரணை முடிந்து கடந்த ஆண்டு (2023) ஜனவரி 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 5 நீதிபதிகளில் 4:1 என்ற பெரும்பான்மையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியே என்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்து. நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்திருந்தார்.

பி.வி.நாகர்த்னா

பண மதிப்பிழப்பு: பி.வி.நாகரத்னா தீர்ப்பில் சொன்னது என்ன?

நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில், “எனது கண்ணோட்டத்தில் நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது. 2016-ஆம் ஆண்டு இருந்த நிலையை இப்போது திரும்பக் கொண்டுவர முடியாது. ஆனாலும், அந்த நடவடிக்கை சட்டத்திற்கு எதிரான அதிகார துஷ்பிரயேகம். அதனால் அது சட்டத்திற்கு விரோதமானது. அந்த நடவடிக்கை செயல்முறைபடுத்தப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது” எனத் தெரிவித்திருந்தார்.

பி.வி.நாகர்த்னா

இதேபோல தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட ஆளுநர்கள் மீது தொடர்ந்து அம்மாநில அரசுகளால் புகார் வாசிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட அமைச்சர் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருந்தது பேசுபொருளானது. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்ட பின்னர், அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஆளுநர்கள் விவகாரம் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நீதிபதி பி.வி.நாகரத்னா பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

ஒரே மாதத்தில் 5 பேரை காவு வாங்கிய மலை..!வெள்ளியங்கிரி மலையேறிய இன்னொரு நபர் உயிரிழப்பு!

Next Post

இன்று முதல் அயோத்தி ராமருக்கு பருத்தி உடைதான்…கோடை வெயிலில் இருந்து காக்க ராமருக்கு சிறப்பு ஏற்பாடு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று முதல் அயோத்தி ராமருக்கு பருத்தி உடைதான்…கோடை வெயிலில் இருந்து காக்க ராமருக்கு சிறப்பு ஏற்பாடு..!

இன்று முதல் அயோத்தி ராமருக்கு பருத்தி உடைதான்...கோடை வெயிலில் இருந்து காக்க ராமருக்கு சிறப்பு ஏற்பாடு..!

Comments 1

  1. Raja lingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In