இதைத் தொடர்ந்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக ஒரு மாற்றம் வர வேண்டுமென்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். இதை முன்னிறுத்தியே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அடுத்த தேர்தலை குறித்து இப்போதே சொல்ல முடியாது. 2026 கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.
பாஜக கூட்டணியில் இருந்துகொண்டே நீட் தேர்வை வலிமையாக எதிர்ப்போம். பிரதமரிடம் நீட் விவகாரம் குறித்து விளக்கி இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வோம்.
இது எங்களின் சித்தாந்த கூட்டணி அல்ல.சமூகநீதி எங்களது அடிமட்ட கொள்கை. எந்த கூட்டணியிலிருந்தாலும் அதை ஒருதுளியும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை. tஹேர்தல் பிரசாரம் குறித்து ஓரிரு நாள்களில் அறிவிப்போம் என்றார்.
