பழனி: பழனி மலைக் கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை (மாா்ச் 28) நிறுத்தப்படவுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய படிவழிப் பாதை, யானைப் பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது.
இரண்டு நிமிஷங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப்காா் தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும்.
ரோப்காா் பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை ரோப்காா் இயக்கம் நிறுத்தப்படுகிறது என திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
.
