Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஓபிஎஸ் சொத்து குவிப்பு வழக்கு : ஆவேசமான நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் – தேர்தல் விதிகள் எங்களுக்கு கிடையாது..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 25, 2024
in Default
0
ஓபிஎஸ் சொத்து குவிப்பு வழக்கு : ஆவேசமான நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் – தேர்தல் விதிகள் எங்களுக்கு கிடையாது..
73
SHARES
118
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அதிமுக ஆட்சி நடந்த 2001 – 2006 காலகட்டத்தில் பொதுப் பணி மற்றும் வருவாய் துறைகளின் அமைச்சராகவும், சில மாதங்கள் முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ், அவரது மனைவி விஜயலட்சுமி, ஓ.ராஜா, ரவீந்திரநாத் ஆகியோருக்கு எதிராக 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

லஞ்ச ஒழிப்புத் துறை மனு

லஞ்ச ஒழிப்புத் துறை மனு

இந்த வழக்கில் 2009ஆம் ஆண்டு விசாரணையை முடித்து தேனி நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு இவ்வழக்கு சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2011ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது ஓபிஎஸுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை மனுதாக்கல் செய்தது.

​ஓபிஎஸ் விடுவிப்பு – ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி

இதனை ஏற்று இந்த வழக்கில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்தது சிவகங்கை நீதிமன்றம். இந்த வழக்கை 11 வருடங்களுக்கு மீண்டும் தோண்டியெடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். ஓபிஎஸுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் மறு ஆய்வுக்கு எடுத்து அதிரடி காட்டினார். இது ஓபிஎஸ் தரப்பினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நிராகரித்த உச்ச நீதிமன்றம்

நிராகரித்த உச்ச நீதிமன்றம்

மறுஆய்வு வழக்கின் விசாரணைக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்கின் தன்மை, தகுதியின் அடிப்படையிலேயே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இந்த வழக்குகளை விசாரிக்கிறார் என்றும், எனவே இதில் தலையிட விரும்பவில்லை என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

​மீண்டும் விசாரணை

​மீண்டும் விசாரணை

இந்த நிலையில் ஓபிஎஸுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு இன்று மீண்டும் வந்தது. ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “வழக்கை நீண்ட நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதனால் கடுப்பான நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், ஏன் நீண்ட காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் காட்டம்

நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் காட்டம்

மேலும், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு விசாரிக்க வேண்டும் என கேட்கிறீர்களா? தேர்தல் நடத்தை விதிகள் நீதிமன்ற விசாரணைக்கு கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா? என காட்டமாக கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.

​மறுஆய்வு வழக்குகள்

​மறுஆய்வு வழக்குகள்

முன்னதாக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்திருந்தார். இதில் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். வளர்மதி வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மற்ற அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அதிமுக அறிக்கை தாமதமாக எழுத்துப் பிழையே காரணம் : ஆர்பி உதயகுமார் விளக்கம்!

Next Post

10ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
10ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!

10ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In