Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு: திமுக அமைச்சர் மீது வழக்குப்பதிவு.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 25, 2024
in Default
1
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு: திமுக அமைச்சர் மீது வழக்குப்பதிவு.!
24
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில், கடந்த 22ஆம் தேதி இரவு ‘இந்தியா’ கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்த இக்கூட்டத்தில், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி காமராஜரைப் பற்றி புகழாரம் பாடுகிறார். ஆனால், காமராஜர் டெல்லியில் இருந்தபோது அவரை கொல்ல முயற்சித்ததே பாஜகவினர் தான் எனக் கூறியதோடு ஒருமையில் கடுமையான விமர்சனம் செய்தார். மேலும், காமராஜரைப் பற்றி பேச இவர்களுக்கு எவ்வித தகுதியும் இல்லை எனக் கூறி பிரதமர் மோடியையும், பாஜகவினரையும் கொச்சை வார்த்தைகளில் சாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, அமைச்சரின் இந்த அவதூறு விமர்சனத்திற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில், திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை கொச்சை வார்த்தைகளால் விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 292/B (பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில ஆபாசச் செயலைப் புரிந்தல் அல்லது ஆபாச பாடலைப் பாடுதல், வாசகத்தை உச்சரித்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous Post

உதயநிதியை சீண்டிய எடப்பாடி… இதையேதான் காட்டுறீங்க, மதுரைக்கு என்ன செய்ஞ்சீங்க : மேடையிலேயே கலாய்த்த EPS.

Next Post

மைக் சின்னம் எல்லாம் எங்களுக்கு ஒத்து வராது: தேர்தல் ஆணையத்திடம் சீமான் காட்டம்.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மைக் சின்னம் எல்லாம் எங்களுக்கு ஒத்து வராது: தேர்தல் ஆணையத்திடம் சீமான் காட்டம்.!!

மைக் சின்னம் எல்லாம் எங்களுக்கு ஒத்து வராது: தேர்தல் ஆணையத்திடம் சீமான் காட்டம்.!!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இதெல்லாம் ஒரு வழக்கா நம் தமிழக அரசியல்வாதிகள் மீது மிகப்பெரிய வழக்குகள் குற்றச்சாட்டுகள் எல்லாம் உள்ளன அதையெல்லாம் பார்த்த நம் அரசியல்வாதிகள் இந்த வழக்கை எதிர் நோக்க மாட்டார்களா இவர்களை பொருத்தவரை இது போன்ற வழக்குகள் அனைத்தும் ஜூஜூபி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In