Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேசபக்தர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் 17 நாட்களை தாண்டியது : அவர் இறப்பதற்கு முன் அவரையும் லடாக்கையும் காப்பாற்ற கோரிக்கை.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 22, 2024
in Default
0
தேசபக்தர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் 17 நாட்களை தாண்டியது : அவர் இறப்பதற்கு முன் அவரையும் லடாக்கையும் காப்பாற்ற கோரிக்கை.
35
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சோனம் வாங்சுக் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மொழி ஆகியவற்றை பாதுகாத்து வருபவர். இதற்காக இவர் பல உயரிய நிறுவனங்களால் விருது பெற்றுள்ளார், அதில் ஐநாவின் உயரிய விருதும் அடங்கும். ஆசியாவின் நோபல் விருதான ராமன் மகசேசே விருதும் பெற்றவர் ஆவார்.இவர் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டியும், லடாக்கின் இயற்கை வளங்களான காடுகள், மலைகள், சுரங்கங்கள், சுத்தமான நன்னீர் ஏரிகள், மிகவும் அழிவு நிலையில் உள்ள அரிய காட்டு விலங்குகள் போன்றவற்றை தனியார்க்கு தாரை வார்ப்பதிலிருந்து தடுத்து அங்குள்ள இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்கவும், லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்த்து லடாக்கில் உள்ள மலை வாழ் ஆதிவாசிகளின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மொழியையும் பாதுகாக்க வேண்டி 21 நாள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்தியா டுடேயின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், ஆர்வலர் சோனம் வாங்சுக், லடாக்கில் மைனஸ் 17 டிகிரி வெப்பநிலையில் 21 நாள் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது ஏன் என்று கேட்டார்,“இது சுற்றுச்சூழலைப் பற்றியது. இது ஜனநாயகத்தைப் பற்றியது, ஏனென்றால் லடாக்கும் மாநில அந்தஸ்து அல்லது சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசத்தை கோருகிறது.

இங்கு சட்டசபை மற்றும் முதல்வராக இருக்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை இப்படி மீறினால் தேர்தல் கேலிக்கூத்தாக மாறிவிடும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததால் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதே இதற்குக் காரணம். எனவே நாங்கள் 21 நாள் உண்ணாவிரதத்தில் தொடங்கியுள்ளோம். எந்த நடத்தை நெறிமுறையையும் அல்லது எதையும் கருத்தில் கொள்ள மாட்டோம்” என்று சோனம் வாங்சுக் கூறினார்.

ஆளும் பாஜக கட்சி ஜம்மு காஷ்மீரை பிரித்து சரத்து 370 ரத்து செய்ததை அடுத்து ஜம்மு காஷ்மீர் லடாக் என்று இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. லடாக் மாநிலத்தில் யூனியன் பிரதேசம் ஆகையால் அங்கு சட்டசபை இல்லை. ஆனால் ஒரே ஒரு லோக்சபா எம்பி மற்றும் உள்ளது.2019 மற்றும் 2020 வருடங்களில் பாஜக தேர்தல் வாக்குறுதியாக லடாக்கை அரசியல் அமைப்பின் ஆறாவது அட்டவணையில் இணைத்து அதற்கு முழு மலைவாழ் மக்களின் அங்கீகாரத்தை கொடுத்து அங்குள்ள காடுகள் இயற்கை வளங்கள் அனைத்தும் அங்குள்ள மக்களை கொண்டே சட்டம் இயற்றி நிர்வகிக்கப்படும் என்று கூறியது. ஆனால் இன்றுவரை நட க்கவில்லை. 2022 ஆம் வருடம் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக வந்து லடாக் மக்களுக்கு ஆறாவது அட்டவணை வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி தருகிறேன் என்று கூறினார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு பாஜக விடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை. லடாக்கிற்கு ஆறாவது அட்டவணை கொடுக்கவில்லை என்றால் அங்குள்ள காடுகள் தனியார் வசமாகும், அங்குள்ள கனிமவள சுரங்கள் தனியாருக்கு ஏலம் விடப்படும். இதனால் மிகவும் நாசுக்கான லடாக்கின் இயற்கை மலை அமைப்பு பாதிப்புக்கு உள்ளாகும். அது அங்குள்ள அரிய வகை காட்டு விலங்குகள் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் கலாச்சாரத்தை பாதிக்கும்.

Previous Post

ஏர் இந்தியாவுக்கு அடுத்த அடி..! :ரூ.80 லட்சம் அபராதம் விதித்த DGCA.

Next Post

விஜய பிரபாகரன் எனக்கு மகன் மாதிரி: ராதிகா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜய பிரபாகரன் எனக்கு மகன் மாதிரி: ராதிகா

விஜய பிரபாகரன் எனக்கு மகன் மாதிரி: ராதிகா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In