Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ராதிகாவிற்கு எதிராக களமிறக்கப்பட்ட விஜய பிரபாகரன். விருதுநகரில் பிரேமலதா போட்ட “ஸ்கெட்ச்”

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 22, 2024
in Default
0
ராதிகாவிற்கு எதிராக களமிறக்கப்பட்ட விஜய பிரபாகரன். விருதுநகரில் பிரேமலதா போட்ட “ஸ்கெட்ச்”
56
SHARES
91
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் பிறந்த ஊரான விருதுநகரில் விஜய பிரபாகரன் களம் காண்பதால் அவருக்கு அங்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, கடைசியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 சீட்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நடத்தினார். இந்நிலையில், தேமுதிக வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார் பிரேமலதா. இதில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் விஜய பிரபாகரன், மத்திய சென்னை தொகுதியில் பார்த்தசாரதி, திருவள்ளூரில் நல்லதம்பி, தஞ்சாவூரில் சிவநேசன், கடலூரில் சிவக்கொழுந்து ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விருதுநகரில் விஜய பிரபாகரன் போட்டியிடுவதால் அந்த தொகுதி தேமுதிக வசம் செல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். விஜயகாந்த் பிறந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு விஜயகாந்துக்கு எப்போதுமே பேராதரவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதுவும் தற்போது விஜயகாந்த் மறைந்துவிட்டதால் உருவான அனுதாப அலையாலும், விஜயகாந்தின் மகன் என்பதாலும் விஜய பிரபாகரன் எளிதில் வெற்றி பெறுவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமார் போட்டியிடுவதால் விருதுநகர் தொகுதி நட்சத்திர தொகுதி அந்தஸ்தை பெற்றுள்ளது. நாயுடு சமூகத்தினர் அதிகம் உள்ள தொகுதி என்பதால் அதே சமூகத்தைச் சேர்ந்த ராதிகா அங்கு களம் இறக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. அதே சமயத்தில், விஜய பிரபாகரனும் அதே சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் விருதுநகரில் பிறந்ததற்கு பிறகுதான், அவரது குடும்பம் மதுரையில் குடியேறிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Previous Post

“ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்ச நீதிமன்றம்” – பொன்முடி பதவியேற்ற பின் ஸ்டாலின் கருத்து.! 

Next Post

டெல்லி மதுபான ஊழலின் மையப்புள்ளி கெஜ்ரிவால் தான்: பஞ்சாப், கோவா தேர்தல்களில் அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது: நீதிமன்றத்தில் ED

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லி மதுபான ஊழலின் மையப்புள்ளி கெஜ்ரிவால் தான்: பஞ்சாப், கோவா தேர்தல்களில் அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது: நீதிமன்றத்தில் ED

டெல்லி மதுபான ஊழலின் மையப்புள்ளி கெஜ்ரிவால் தான்: பஞ்சாப், கோவா தேர்தல்களில் அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது: நீதிமன்றத்தில் ED

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In