தேர்தல் முடிந்ததும் சுவையான பிரியாணி போடுவதாக அறிவித்திருந்தோம். இப்போது கோவைக்கு சுவையான ஆட்டு பிரியாணி தயாராகிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “10 ஆண்டு கால ஆட்சியில் கீழ் நோக்கி சென்ற தமிழகத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு சொல்கின்றார் முதல்வர் ஸ்டாலின். இது தேர்தல் அல்ல, போர். இனத்தை காக்க வேண்டிய போர். இருண்ட ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீண்டு விட்டோம். அடுத்து இந்தியாவை மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது” என்றார்.

கோவையில் நடைபெற்ற மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுக விழா
மேலும், “இரண்டரை ஆண்டுகளில் 10 லட்சம் கோடி முதலீடு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 31 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்றார் முதல்வர். மத்திய அரசு மாறியவுடன் நிறைய திட்டங்கள் கோவை பகுதிக்கு வர இருக்கின்றது. படித்த இளைஞர்கள் பல லட்சம் பேர் இருக்கின்றனர். தேர்தல் முடிந்தவுடன் மகத்தான அறிவிப்புகள் இருக்கும். மகத்தான வளர்ச்சி காத்திருக்கின்றது. இனத்தை காக்க வேண்டிய தேர்தல் இது. திமுகவினர் அனைவரும் சமூக ஊடகங்களில் பங்கேற்க வேண்டும். எதிரணி வாட்ஸ் அப், முகநூலில் கட்சியை வளர்க்கின்றனர். ஒருவேளை ஜெயித்துவிட்டால் என கேட்கின்றனர். ஒருமண்ணும் கிடையாது. கோவையில் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்

கூட்டத்தில் பங்கேற்ற திமுக மகளிர் அணியினர் ஒரு பகுதி
அப்போது, பாஜக வேட்பாளராக அண்ணாமலை கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் பேசிய அவர், “ தேர்தல் முடிந்ததும் சுவையான பிரியாணி போடுவதாக அறிவித்திருந்தோம். கோவையில் மட்டன் பிரியாணி ரெடியாகின்றது. சுவையான ஆட்டு பிரியாணி ரெடியாகிறது” என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாதெரிவித்தார்

டி ஆர் பி ராஜா கோவை பாஜக வேட்பாளரை ஆடு என்று சொல்கிறார் தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும் யார் ஆடு என்பது