மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள விரகனூர் சி.ஆர். மஹாலில் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்ட கலை பிரிவு செயலாளர் அரசு அவர்களின் இல்ல திருமண நிச்சயதார்த்த விழா, மணமகன் கார்த்திகேயன் மணமகள் காயத்ரி இவர்களுடைய விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல். ஏ. ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. பெரிய புலான், கிழக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், மேலூர் சேர்மன் பொன்னுசாமி, தி.மு.க. மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலா நிதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


