Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விஜயபாஸ்கர் ரெய்டு : “அனைத்து சோதனைகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” – EPS புல் கான்பிடன்ட்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 21, 2024
in Default
1
விஜயபாஸ்கர் ரெய்டு : “அனைத்து சோதனைகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” – EPS புல் கான்பிடன்ட்.
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: “அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டரீதியாக அனைத்து வழக்குகளையும் சந்திப்போம். அனைத்து ரெய்டுகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று விஜயபாஸ்கர் வீட்டில் நடந்து வரும் ரெய்டு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் வெளியீடு இன்று (வியாழக்கிழமை) நடந்தது. வேட்பாளர்கள் விவரங்களை அறிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டரீதியாக அனைத்து வழக்குகளையும் சந்திப்போம். அனைத்து ரெய்டுகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம். பெண்கள் விருப்பப்பட்டு கேட்பவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரை பொறுத்தவரை எஸ்டிபிஐ கட்சிக்கு சீட் கொடுத்துள்ளோம். மதச்சார்பற்ற கட்சி இது.

வெற்றிவாய்ப்பை பொறுத்து தான் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். ஜூனியர், சீனியர் எல்லாம் கிடையாது. தலைமைக்கு விசுவாசமாக, உழைப்பு செலுத்துபவருக்கே அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதுமுக வேட்பாளர்களுக்கு சீட் கொடுப்பதில் என்ன தவறு.

கூட்டணி என்பது சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி இருந்து தான் ஒரு கட்சி வெற்றிபெறும் என்றால் அந்த கட்சி நிலையாக இருக்க முடியாது. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்கள்.

பெட்ரோல், டீசல் விலையை திமுக குறைக்க முடியுமா.. அல்லது இண்டியா கூட்டணியா ஆட்சிக்கு வரப்போகிறது குறைப்பதற்கு. 2021 தேர்தல் அறிக்கையிலும் இதேபோல் குறைப்பதாகச் சொன்னார்கள். அதை முதலில் குறைக்கட்டும்.

அதிமுக பலம் வாய்ந்த கட்சி. அதிமுகவின் வலிமையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை பலவீனமாக எடைபோட வேண்டாம். திமுக எம்பி.,க்கள் செய்த சாதனைகள் என்ன. ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்துக்கு கிடைக்க கூடிய வெளிமாநில நீரை கூட திமுக பெறவில்லை.” என்று தெரிவித்தார்.

Previous Post

TNPSC குரூப் 2: நேர்காணல் முடிந்த பின்னரும் 29 காலியிடங்கள்.. மீண்டும் நேர்முகத்தேர்வு..!

Next Post

காங்கிரஸை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கு மோடி அனைத்து வேலைகளையும் செய்கிறார் : சோனியா நேரடி தாக்கு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரஸை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கு மோடி அனைத்து வேலைகளையும் செய்கிறார் : சோனியா நேரடி தாக்கு.

காங்கிரஸை பொருளாதார ரீதியாக முடக்குவதற்கு மோடி அனைத்து வேலைகளையும் செய்கிறார் : சோனியா நேரடி தாக்கு.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    எந்த ஒரு அமைச்சரும் தன்னந்தனியாக ஊழலிலோ அல்லது லஞ்சம் வாங்குவதிலோ செய்ய இயலாது கண்டிப்பாக அதைத் துறை சார்ந்த ஐஏஎஸ் ஆபிஸர்கள் அதாவது முதன்மை செயலாளர்கள் உடந்தையுடன் தான் செய்ய இயலும் ஏனென்றால் அனைத்து ஆவணங்களிலும் இந்த முதன்மை செயலாளர் கையெழுத்து போட வேண்டியது இருக்கும் போட்டு இருக்கிறார்கள் ஆனால் இந்த அமலாக்கத்துறை வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் அமைச்சர்களை மட்டுமே குறி வைக்கின்றன உதாரணத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சராக இந்த நபர் இருக்கும்போது அதன் முதன்மைச் செயலாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக உள்ளார் அவரை கண்டு கொள்ளவே இல்லை இந்த ராதாகிருஷ்ணன் இல்லாமல் சுகாதாரத் துறையில் எந்த ஒரு ஊழலும் நடக்க இயலாது மொத்த ஊழலுக்கு காரணம் இந்த ஜெ. ராதாகிருஷ்ணன். இவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In