Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நா.த.கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் :

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 20, 2024
in Default
1
நா.த.கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் :
86
SHARES
139
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் 23ம் தேதி அறிமுகம் செய்து வைக்க உள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான், ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. மேலும், நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடும் என்ற அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள 40 வேட்பாளர்களை, ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்வுக்கு தலைமை வகித்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.

அதன்படி மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்கு, சென்னை கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம் – பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனை அருகே நடைபெற உள்ளது. முன்னதாக பிரச்சாரத்துக்கான களப்பணிகளை திட்டமிட்டு ஒருங்கிணைப்பதற்காக போட்டியிட இருக்கும் 40 வேட்பாளர்கள் மற்றும் தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் சென்னை அண்ணாநகரில் நாளை (மார்ச்.21) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Previous Post

“வேலை தேடுவதை விட வேலை கொடுக்கும் நபராக முன்னேறிய இளைஞர்கள்”: பிரதமர் மோடி பெருமிதம்..

Next Post

மணிப்பூரில் காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு..!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மணிப்பூரில் காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு..!!

மணிப்பூரில் காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு..!!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் தோல்வி அடையப் போகிறார்கள் என்பதால் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் சீமான் அறிமுகப்படுத்தியுள்ளார் அதாவது 40 தொகுதியிலும் தோல்வியை அடையப் போகிறவர்கள் இவர்கள்தான் என்று பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுகிறார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In