கோயில்களுக்கு வழங்கவேண்டிய நிதியை அளிக்காத உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக 9 கோயில்களுக்கு கொடுக்க வேண்டிய 9 லட்சம் ரூபாய் நிதியை நிறுத்தி வைத்து, கோயில் நிர்வாகத்தின் கோரிக்கைக்கு மாநில அரசு செவி மடுக்காமல் இருந்துள்ளதாக உயர்நீதிமன்றம் கடுமையாக கடிந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அடுத்த 24 மணிநேரத்தில், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து சமய ஆன்மீக தலைநகராக கருதப்படும் உத்தரபிரதேசத்தில் இந்து கோயில்களுக்கே நிதி வழங்காமல் இருந்த அரசை பல சமூக ஆர்வலர்களும் மாற்று மத கருத்துள்ளவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

