*திருத்துறைப்பூண்டி, மார்ச்-18, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா திருக்களார் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க்குடி பொதுநல அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்நிகழ்வில் தமிழ்க்குடி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் நாக.அறிவழகன் தலைமை தாங்கினார், முத்துப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் ராஜா நிகழ்வை துவக்கி வைத்து உரையாற்றினார், எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியில் சிறப்பு மருத்துவர் U.சுரேஷ், இதயம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் ப.லெனின், குழந்தை நல சிறப்பு மருத்துவர் ஜெ.ஜெயப்பிரகாஷ், பல் மருத்துவர் விவாகலெட்சுமி ஆகிய மருத்துவர்களும் மற்றும் இ.தனசெயன்,G.வேதையன்,ந.கார்த்திக் ஆகிய வழக்கறிஞர்கள் 500 மேல்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்
