இந்தியாவில் 7 கட்டங்களாக 18வது மக்களவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் இன்று அதாவது மார்ச் மாதம் 16ஆம் தேதி தெரிவித்தது. அதில் முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி 7ஆம் கட்டத்தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கிவிட்டது 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக நல்ல நிர்வாகத்தினாலும், நிறைவேற்றிய வாக்குறுதிகளினாலும் செய்யப்பட்ட எங்களின் சாதனைகளைச் சொல்லி மக்களிடத்தில் வாக்கு சேகரிப்போம். இந்த தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.

இதற்கும் கருத்து சொல்ல விரும்பவில்லை