Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 16, 2024
in Default
1
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கைது!
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆபாச படத்தை வெளியிட்டுவிடுவேன் என்று கூறி தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுர ஆதீன வீடியோ வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை தனிப்படையால் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் நிர்வாகம் செய்து வருகிறார்.

தருமபுரம் ஆதீனகர்த்தர்

தருமபுரம் ஆதீனகர்த்தர்

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவராக உள்ள அகோரம், தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக ஆதீனத்தின் சகோதரரும், உதவியாளருமான விருதகிரி அளித்த புகாரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆதீனம் சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அதை வெளியிடுவேன் என அகோரம் உள்ளிட்ட நபர்கள் மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அகோரம்

அகோரம்

இவ்வழக்கில் அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பாஜகவின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவர் மும்பையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

சலுகைகளை பெற லஞ்சம் கொடுத்த புகார் : அதானி குழுமம் மீதான விசாரணையை தொடங்கியது அமெரிக்கா.!

Next Post

தேர்தலுக்கு முன்பே தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்.. லிஸ்ட் அனுப்பிய தேர்தல் ஆணையம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேர்தலுக்கு முன்பே தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்.. லிஸ்ட் அனுப்பிய தேர்தல் ஆணையம்!

தேர்தலுக்கு முன்பே தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்.. லிஸ்ட் அனுப்பிய தேர்தல் ஆணையம்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    ஆதீனத்தை மிரட்டிய பிஜேபி கட்சி சார்ந்த நபரை கைது செய்ததை வரவேற்கிறேன் பிஜேபி கட்சியில் இப்பொழுது மிகப் பெரிய ரௌடிகள் பணம் கொடுத்து சேர்ந்து கொண்டு மிகப் பெரிய பதவியையும் வாங்கிக் கொண்டு தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர் . காவல்துறையினர் ஏனோ மௌனம் சாதிக்கின்றனர்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In