Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

லஞ்சம் தராத லாரி உரிமையாளருக்கு அடி, உதை… எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 15, 2024
in Default
1
லஞ்சம் தராத லாரி உரிமையாளருக்கு அடி, உதை… எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்!
46
SHARES
74
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

லஞ்சம் கொடுக்காததால் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது காவல் துறை எஸ்.ஐ தாக்குதல் நடத்தியதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாவேரி

ஹாவேரி

கர்நாடகா மாநிலம், ஹாவேரி மாவட்டத்தில குட்டல் காவல் நிலையம் உள்ளது. இங்கு எஸ்.ஐயாக பணியாற்றுபவர் சங்கர் கவுடா பாட்டீல். இவர் மீது தான் தற்போது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

ரானேபென்னூர் தாலுகாவில் உள்ள பேலூரில் இருந்து சிக்கோடிக்கு அனுமதிச் சீட்டுடன் மணல் லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அப்போது லாரி உரிமையாளர் குட்டப்பா, ஓட்டுநர் டிமப்பாகுரி ஆகியோர் லாரியில் இருந்துள்ளனர். அவர்களிடம் அனுமதிச்சீட்டு இல்லாமல் மணல் கடத்துவதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், தாங்கள் அனுமதிச் சீட்டுப் பெற்று தான் மணல் அள்ளிச் செல்வதாக லாரி உரிமையாளர் குட்டப்பா கூறியுள்ளார். இதனால் அவரும், லாரி ஓட்டுநரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லாரி உரிமையாளர் குட்டப்பா, ஹாவேரி மாவட்ட எஸ்.பி- அன்சுகுமாரிடம் புகார் அளித்தார். முறையாக பாஸ் வாங்கி மணல் அள்ளிச் சென்ற எங்களை, குட்டல் போலீஸார் அடித்து உதைத்தனர். அத்துடன் எனது மூன்று சவரன் தங்கச்சங்கிலியையும் போலீஸார் திருடினர். எஸ்.ஐ சங்கர் கவுடா பாட்டீல், 80,000 ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் பலத்த காயமடைந்த லாரி உரிமையாளர் குட்டப்பா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எஸ்.ஐ சங்கர் கவுடா பாட்டீல் மீது ஏற்கெனவே பல சர்ச்சைகள் உள்ளன. திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர், ஹோஸ்ட்ரி காவல் நிலையத்தில் காவலில் இருக்கும் போது உயிரிழந்ததாக எஸ்.ஐ சங்கர் கவுடா பாட்டீல் மீது புகார் கூறப்பட்டது. தற்போது லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரை அடித்து உதைத்ததுடன் லஞ்சம் கேட்டதாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது. இப்புகார் குறித்து விசாரணை நடத்த எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் ஹாவேரி மாவட்ட காவல் துறை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

எடியூரப்பா மீது போக்சோ வழக்கு: அண்ணாமலை, குஷ்பு வாய் திறக்காதது ஏன்?

Next Post

மாணவர்களின் வாக்காளர் அட்டை போன்ற தனிநபர் தரவுகளை கேட்ட ஆளுநர் :மாணவர்கள் கடும் எதிர்ப்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாணவர்களின் வாக்காளர் அட்டை போன்ற தனிநபர் தரவுகளை கேட்ட ஆளுநர் :மாணவர்கள் கடும் எதிர்ப்பு..

மாணவர்களின் வாக்காளர் அட்டை போன்ற தனிநபர் தரவுகளை கேட்ட ஆளுநர் :மாணவர்கள் கடும் எதிர்ப்பு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    நியாயமான முறையில் விசாரணை நடத்தி அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுப்பார்களா காவல்துறை உயர் அதிகாரிகள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In