Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘இதற்காவது பதில் வருமா?’-உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2023
in அரசியல் செய்திகள்
0
‘இதற்காவது பதில் வருமா?’-உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

‘நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன?’

‘நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதற்காவது பதில் வருமா?’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அண்ணாமலை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

DMK Files வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம்.

முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை.

#DMKFiles வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம்.

முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை.

முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்… pic.twitter.com/HSfByl3iO0

— K.Annamalai (@annamalai_k) May 28, 2023

முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது.

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன?

இதற்காவது பதில் வருமா? என அந்தப் பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, உதயநிதியின் மனைவியும் திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதியின் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ. 36.3 கோடி. அதன்படி அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.34.7 லட்சம் ரொக்கமும் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் கிருத்திகாவின் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. உதயநிதி அறக்கட்டளைக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லல் குரூப்ஸ் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின் படி 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும், அவரது வங்கி கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்லல் குரூப்ஸ் மற்றும் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக உதயநிதி அறக்கட்டளை நிர்வாகியும் வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் கிருத்திகா உதயநிதியின், 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும், அவரது வங்கி கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனை இரண்டாவது நாளாக தற்போது கிருத்திகா உதயநிதியின் அசையா சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கில் உள்ள ரொக்கத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்நிலையில், என்னை பற்றி பொய் செய்தி வெளியிடுபவர்கள் குறைந்த பட்சம் எனது நல்ல புகைப்படத்தை பயன்படுத்துமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

‘கிராமத்து பின்னணி கொண்ட கதையில் நடிக்க எனக்கு நீண்ட நாள் ஆசை’ – நடிகர் ஆர்யா

Next Post

காரைக்குடி | உடலில் சந்தனம் பூசி, கத்தியை வீசியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காரைக்குடி | உடலில் சந்தனம் பூசி, கத்தியை வீசியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

காரைக்குடி | உடலில் சந்தனம் பூசி, கத்தியை வீசியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In