பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மார்ச் 14 அன்று மாநில சட்ட மேலவைக்கு நான்காவது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
நிதிஷ் குமார் தவிர, சட்டப் மேலவையின் 11 இடங்களுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 10 வேட்பாளர்கள், வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசித் தேதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி (ஆர்ஜேடி), மாநில அமைச்சர் சந்தோஷ் சுமன் (எச்ஏஎம்) மற்றும் முன்னாள் அமைச்சர் மங்கள் பாண்டே (பாஜக) ஆகியோர் மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றவர்களில் அடங்குவர்.

