Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கட்சிகளின் ஆன்லைன் விளம்பர செலவு ரூ.102.70 கோடி : விளம்பரத்திற்காக அதிக செலவு செய்த கட்சி எது தெரியுமா?.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 13, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கட்சிகளின் ஆன்லைன் விளம்பர செலவு ரூ.102.70 கோடி : விளம்பரத்திற்காக அதிக செலவு செய்த கட்சி எது தெரியுமா?.
30
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி : வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கடந்த மூன்று மாதங்களில் மட்டும், ஆன்லைன் விளம்பரங்களுக்காக, அரசியல் கட்சிகளும், தனியார் அமைப்புகளும், 102.70 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதில், இணைய விளம்பரங்களுக்கு அதிகபட்சமாக, பா.ஜ., 37 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியோ வெறும், 12.20 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளது. காங்கிரசை விட, 300 மடங்கு அதிகமாக, பா.ஜ., செலவிட்டுள்ளது. காங்கிரஸ் செலவிட்ட, 12.20 லட்சம் ரூபாயிலும், ராகுல் மேற்கொண்டுள்ள, ‘பாரத் ஜோடோ நியாய்’ யாத்திரை பற்றி பேசும் பேஸ்புக் பதிவுகளை பிரபலப்படுத்த மட்டும், 5.7 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளம்பரங்களுக்காக, பா.ஜ.,வுக்கு அடுத்ததாக, ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி, 4 கோடி ரூபாயும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின், பிஜு ஜனதா தளம், 51 லட்சம் ரூபாயும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, 39.50 லட்சம் ரூபாயும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 27 லட்சம் ரூபாயும் செலவிட்டுள்ளன.
உ.பி., மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா உள்ளிட்ட மாநில கட்சிகள் எதுவும், எந்த விதமான ஆன்லைன் விளம்பரங்களையும் செய்யவில்லை.

பா.ஜ.வுக்கு அடுத்து இணையத்தில் அதிகபட்ச புகழோடு இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, கூகுள் நிறுவனத்தில் விளம்பரம் செய்வதற்காக பதிவு செய்துள்ளதே தவிர, இதுவரை எந்தச் செலவும் செய்யவில்லை.

இந்த விளம்பர செலவுகளை அரசியல் கட்சிகள் மட்டும் நேரடியாக செய்யவில்லை. பல பெயர்களில் இயங்கும் தனியார் அமைப்புகளும், இந்த விளம்பரச் செலவை செய்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை, அரசியல் கட்சிகளின் பினாமி நிறுவனங்களே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ரகசிய அமைப்புகள் பேஸ்புக்கின் மூலநிறுவனமான மெட்டாவில் மட்டும், 5.7 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன.

.

Previous Post

முதலமைச்சர் ஸ்கூலுக்கு போயிருக்காரானு தெரியல. வரலாறு புத்தகத்தை நல்லா படிக்கனும்: முதல்வருக்கு பாடம் எடுத்த அண்ணாமலை.

Next Post

மயான கொள்ளை உற்சவம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மயான கொள்ளை உற்சவம்..

மயான கொள்ளை உற்சவம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In