குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சோதனையில் குஜராத் கடற்பகுதியில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை கைது செய்து விசாரணை நடந்துவருகிறது.
குஜராத் – போர்பந்தரில் இருந்து 350 கி.மீ தொலைவில் கடற்பகுதியில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல், படகுடன் ஆறு பாகிஸ்தானியர்கள் கைது! இதுவரை குஜராத்தில் மட்டும் ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
