புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள சூழ்நிலையில் போதை பொருட்களின் நடமாட்டமும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு புதுச்சேரியில் வெறும் 0.06 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது, கடந்தாண்டு 128.28 கிலோவாக உயர்ந்துள்ளது. இந்தாண்டு இதுவரை 37.10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 527.02 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
உயர் போதைகள்
கஞ்சா மட்டுமின்றி புதுச்சேரியில் ெஹராயின், கொகைகன் கூட பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 4.921 கிலோ ெஹராயின் கோகையின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்து.
கடந்த 2022ம் ஆண்டு முதல் எம்.டி.எம்.ஏ., எனப்படும் உயர் போதை பொருட்கள் 8.54 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 7.9 கிலோ எம்.டி.எம்.ஏ., போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு இதுவரை 166 எல்.எஸ்.டி., போதை ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிக்கிய குருவிகள்
புதுச்சேரியில், கடத்த 10 ஆண்டுகளில் போதை பொருட்களை கடத்திய 1068 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருட்கள் புதுச்சேரியில் உற்பத்தி இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படுகிறது.அந்த வகையில் புதுச்சேரிக்கு போதை பொருட்களை கடத்தியதாக பெரியவர்கள்-281 பேரும், சிறுவர்கள்-6 பேர் என, பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்சிகள் ஒத்துழைப்பு தேவை
புதுச்சேரி அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க முடியும்; நமது இளைய தலைமுறையினரை காப்பாற்ற முடியும். இந்த நடவடிக்கைகளில் எதிர்கட்சிகள் எதிரிகட்சிகளாக இல்லாமல் அரசுடன் ஆக்கப்பூர்வமாக கைகோர்க்க வேண்டும்.

