Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திமுக குடும்ப உறுப்பினரின் வெளிநாட்டு முதலீடுகளை MP அப்துல்லா பார்த்துக்கொள்கிறாரா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 8, 2024
in Default
0
திமுக குடும்ப உறுப்பினரின் வெளிநாட்டு முதலீடுகளை MP அப்துல்லா பார்த்துக்கொள்கிறாரா?
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுக்கோட்டையை சேர்ந்தவரான எம்.எம்.அப்துல்லா திமுகவில் NRI Wing செயலாளராகவும் உள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், திடீரென சவுக்கு சங்கருடன் தரை லோக்கலாக சண்டை போட்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

பொதுவாக அரசியல் தலைவர்களை வம்பிழுக்கும் வகையில் ட்வீட் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சவுக்கு சங்கர், இவர் திமுகவினர் பற்றி தொடர்ந்து பல ட்வீட்டுகளை பதிவிடுவார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்குவார். அவருக்கு திமுகவினர் பதிலடி கொடுப்பார்கள். 

இந்தநிலையில், கடந்த மார்ச் 11-ம் தேதி திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா குறித்து சவுக்கு சங்கர் வெளியிட்ட ட்விட்டரில், முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் வெளிநாட்டு முதலீடுகளை இவர் தான் பார்த்துக்கொள்கிறார் என பதிவிட்டார். இந்த பதிவை அடுத்து நேரடியாக களத்தில் இறங்கிய அப்துல்லா, ஓபாமாவின் சுவிஸ் முதலீடுகளையும் நான் தான் பார்த்துக்கொள்கிறேன் என கிண்டலாக பதிலளித்தார். 

அடுத்தடுத்து சவுக்கு சங்கரை கமெண்ட் செய்தார் அப்துல்லா. அந்த ட்வீட்டுகளை எல்லாம் ரீ-ட்வீட் செய்து சவுக்கு சங்கர் எம்.பி., பேசும் பேச்சை பாருங்கள் என பதிவிட்டார். உடனே அதற்கும் பதிலளித்த எம்.எம்.அப்துல்லா, என்னை எம்.பி. ஆக்காமல் உன்னை மாதிரி ஒருவரை ஆக்குவார்களா என கொஞ்சம் பீப் வார்த்தைகளோடு பதிவிட்டார். 

இந்த உரையாடல் அடுத்தடுத்து சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசமாக போக ஒரு கட்டத்தில் எம்.பி. எம்.எம்.அப்துல்லா சவுக்கு சங்கருக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டார். ஆனாலும் சவுக்கு சங்கர் ‘ஏன் பதிலளிக்கவில்லை’ என்னுடன் விவாதிக்க ஆர்வம் இல்லையா என மீண்டும் வம்பிழுத்தார். ஆனால் அதன்பிறகு அப்துல்லாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் அடுத்தடுத்த தனக்கு வழக்கமான அரசியல் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். சவுக்கு சங்கர் தொடர்ந்து எம்.எம்.அப்துல்லாவை டேக் செய்து பதிவிட்டாலும், அவர் எந்த பதிலும் தரவில்லை. இப்படியாக ஒருவழியாக இந்த பிரச்சனை முடிக்கப்பட்டது. 

கடந்த சில நாட்களாக ஒரு போதை மருந்து கயவனோடு என்னை சம்மந்தப்படுத்தி சிறிதும் அடிப்படையற்ற.. 100%பொய்யான தகவல்களைப் பரப்பி வந்த சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் மீது கிர்மினல் அவதூறு வழக்கு தொடுத்துள்ளேன். ஆதாரங்களுடன் கோர்ட்டிற்கு வரவும். காலமும் கோர்ட்டும் உண்மையை தீர்மானிக்கட்டும் என்று MP அப்துல்லா தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்..

கடந்த சில நாட்களாக ஒரு போதை மருந்து கயவனோடு என்னை சம்மந்தப்படுத்தி சிறிதும் அடிப்படையற்ற.. 100%பொய்யான தகவல்களைப் பரப்பி வந்த சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் மீது கிர்மினல் அவதூறு வழக்கு தொடுத்துள்ளேன். ஆதாரங்களுடன் கோர்ட்டிற்கு வரவும். காலமும் கோர்ட்டும் உண்மையை தீர்மானிக்கட்டும் pic.twitter.com/teoA7DFz81

— Pudukkottai M.M.Abdulla (@pudugaiabdulla) March 8, 2024
Previous Post

வங்கி கணக்குகளை முடக்கிய விவகாரம்: காங்கிரசின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

Next Post

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்.,: வயநாட்டில் மீண்டும் ராகுல் போட்டி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்.,: வயநாட்டில் மீண்டும் ராகுல் போட்டி

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்.,: வயநாட்டில் மீண்டும் ராகுல் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In