இந்தர்லோக் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இன்று கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் ஏராளமான ஆண்கள் சாலையில் தொழுகை நடத்தியுள்ளனர். இந்நிலையில் காவலர் ஒருவர் அவர்களை எட்டி உதைத்துள்ளார். சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை இடைநீக்கம் செய்து டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது
டெல்லியில் சாலையோரம் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி! – இணையத்தில் வீடியோ வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை பாய்ந்தது!

