Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

14 குழந்தைகள் மீது மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு! சிவராத்திரி விழாவில் அதிர்ச்சி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 8, 2024
in Default
0
14 குழந்தைகள் மீது மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு! சிவராத்திரி விழாவில் அதிர்ச்சி!
80
SHARES
129
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

2024 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது.  இன்றைய தினம் உலகெங்கும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடத்த மற்றும் இரவு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி வெள்ளிக்கிழமை பிரதோஷத்துடன் வருவது கூடுதல் சிறப்பாகும். 

இந்த நாளில், ராஜஸ்தானில் ஒரு சோக சம்பவம்  நிகழ்ந்துள்ளது. அதாவது, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம் அடைந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.  

படுகாயம் அடைந்த 14 குழந்தைகளை  அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதில், இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் காயம்:

2 குழந்தைகளுக்கு 100 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளது என்று தெரிகிறது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ராஜஸ்தான் அமைச்சர் ஹீரலால் நாகர் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை பார்வையிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது மிகவும் சோகமான சம்பவம். இரண்டு குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு 50 சதவீத தீக்காயமும், மற்றொரு குழந்தைக்கு 100 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Previous Post

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு எதிரான செயல் : ஆசிரியை பணியிடை நீக்கம்.

Next Post

அதிர்ச்சி வீடியோ : டெல்லியில் சாலையில் தொழுத முஸ்லிம்களை காலால் எட்டி உதைத்து அராஜகம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி வீடியோ : டெல்லியில் சாலையில் தொழுத முஸ்லிம்களை காலால் எட்டி உதைத்து அராஜகம்..

அதிர்ச்சி வீடியோ : டெல்லியில் சாலையில் தொழுத முஸ்லிம்களை காலால் எட்டி உதைத்து அராஜகம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In