Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோடை விடுமுறைக்கு பின்.. பள்ளிகள் திறப்பு.. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! இதை படிங்க

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2023
in அரசியல் செய்திகள்
0
கோடை விடுமுறைக்கு பின்.. பள்ளிகள் திறப்பு.. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! இதை படிங்க
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: கோடை விடுமுறைக்கு முன் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை மிக முக்கியமான வார்னிங் ஒன்றை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடனே ஏற்கனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடலாமா என்று ஆலோசனை செய்தார். கடந்த வெள்ளிக்கிழமையும் அவர் நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை செய்தார். அதன்பின் மீண்டும் தலைமை செயலாளர் இறையன்பு உடன் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனைக்கு பின் பள்ளிகளை திறக்க இரண்டு தேதிகளை தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் அறிவித்தார்.

இந்த தேதிகளை முதல்வரிடம் கொடுத்து, முதல்வர் அதில் ஒரு தேதியை தேர்வு செய்வார் என்று அன்பில் மகேஷ் கூறி இருந்தார் . இந்த நிலையில்தான் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 7ம் தேதி பள்ளிகளை திறக்க முதல்வர் ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அனுமதி கொடுத்த நிலையில் அந்த தேதி உறுதி செய்யப்பட்டது. 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் ஜுன் 7ம் தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் கோடை விடுமுறை தொடர்பாக மிக முக்கியமான வார்னிங் ஒன்றை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு கொடுத்துள்ளது. விடுமுறை காலம் நீட்டிக்கப்படுவதால் கோடை காலத்தில் தனியார் பள்ளிகள் தனியாக வகுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 7 நாட்கள் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது. சிறப்பு வகுப்புகள் மட்டுமின்றி பயிற்சி வகுப்புகள் எதையும் எடுக்க கூடாது, பாதி நாள் மட்டும் வாருங்கள் என்று அழைக்க கூடாது, சிலபஸை முடிக்க வேண்டும் என்று மாணவர்களை அவசரப்படுத்த கூடாது என்று பள்ளிகல்வித்துறை சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தனியார் பள்ளிகளை கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விடுமுறை ஏன்? தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்தது. 12ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி நிறைவு பெற்றது. 10ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 30ம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்த இறுதித்தேர்வுகள் ஏப்ரல் 28 உடன் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த 29ம் தேதி முதல் முதல் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

30 நாட்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில்… 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை வெயில் காரணமாக திறப்பு தேதி 7ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வானிலை மிக மோசமாக சுட்டெரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது.

எம்பியே ஆகாமல் நாடாளுமன்றம் வந்திருக்கோம்.. 2024ல் நரேந்திர மோடி தான் பிரதமர்..மதுரை ஆதினம் பூரிப்பு இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே திறப்பு தேதி மாற்றப்பட்டு உள்ளது.

.

Previous Post

ரொம்ப ஈஸி.. உடல் எடையை குறைக்கணுமா? ‛ஸ்லிம்’ ஆக மாற இந்த 5 உணவு பழக்கங்களை தவிர்த்தாலே போதும்!

Next Post

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி விவரத்தை தொலைக்காட்சியில் பகிர்ந்த 3 பேர் மீது வழக்கு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி விவரத்தை தொலைக்காட்சியில் பகிர்ந்த 3 பேர் மீது வழக்கு

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி விவரத்தை தொலைக்காட்சியில் பகிர்ந்த 3 பேர் மீது வழக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In