Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் ; பெங்களூரை தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பு…!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 6, 2024
in Default
1
சென்னை கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் ; பெங்களூரை தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பு…!!
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே எனும் பிரபல உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில், கடையின் ஊழியர், வாடிக்கையாளர்கள் மற்றும் டெலிவரி பாய் என மொத்தம் 8 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், பையில் குண்டை வைத்து தாககுதல் நடத்திய நபரின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகிறது.

இதனிடையே, கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் கோவையில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து, தலைமை செயலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மோப்ப நாய்களின் உதவியுடன், வெடிகுண்டு தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். ஆனால், எந்தப் பொருளும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சென்னை கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரூ காவல் கட்டுப்பாட்டு அறை மின்னஞ்சல் முகவரிக்கு bomb blast in Chennai temple soon என்று jaffersait@outlook.com என்ற இமெயில் முகவரி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து. சென்னை பெருநகர காவல்த்துறையை தொடர்புகொண்டு பெங்களூரு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ள நிலையில்,மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பல கோயில்களில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் வந்துள்ளது. அதாவது, ‘Bomb Blast in Chennai Temple Soon’ என jaffersait@outlook.com என்ற இமெயில் முகவரி மூலம் மிரட்டல் விடுக்கும் மெயில், பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது.

Previous Post

விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? TRB ராஜா பதிலடி.

Next Post

இப்படியும் நடக்குமா? – தேர்வை அறிவித்துவிட்டு மறந்துபோன பல்கலைக்கழகம்… கொதிக்கும் மாணவர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இப்படியும் நடக்குமா? – தேர்வை அறிவித்துவிட்டு மறந்துபோன பல்கலைக்கழகம்… கொதிக்கும் மாணவர்கள்!

இப்படியும் நடக்குமா? - தேர்வை அறிவித்துவிட்டு மறந்துபோன பல்கலைக்கழகம்... கொதிக்கும் மாணவர்கள்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இந்த வெடிகுண்டு மிரட்டலை நம் மாநில காவல்துறை பார்த்துக் கொள்ளும் நாம் பயப்பட வேண்டியது இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In