Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

போக்சோ எல்லாம் போதாது… காட்டு மிராண்டிகளுக்கு உட்சபட்ச தண்டனை வழங்குக : EPS ஆவேசம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 6, 2024
in Default
1
போக்சோ எல்லாம் போதாது… காட்டு மிராண்டிகளுக்கு உட்சபட்ச தண்டனை வழங்குக : EPS ஆவேசம்..
123
SHARES
198
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காட்டுமிராண்டிகளுக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீட்டின் அருகே சாக்கடையில் வீசி சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,19 வயது இளைஞனும், 60 வயதான ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 19 வயது இளைஞனும், சிறுமியை தேடுவதாக கடந்த 2 நாட்களாக நாடகமாடியதும் அம்பலமானது.

சிறுமி கை கால்கள் கட்டப்பட்டு சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியும், குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்கு பிறகு பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். சிறுமியின் பெற்றோரை நேரில் அழைத்து புதுச்சேரி முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் போராட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது, இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உட்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- புதுச்சேரி மாநிலம், சோலை நகர் பகுதியில் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி, கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது, இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உட்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதுவே இது போன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கும் எனவும் வலியுறுத்துவதுடன்.

பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் உங்களது குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.

9 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவர்களின் ஒருவன் ஆர்எஸ்எஸ்ஐ சேர்ந்தவர்னு சொல்லப்படுது.. அதனாலதான் புதுச்சேரி காவல்துறை நீதி கேட்டு போராடும் பொதுமக்களை ஒடுக்குகிறது😡😡

இந்த RSS-பாஜக கும்பலிடம்
தமிழ்நாடு மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்🙏#JusticeForAarthi #BJPFailsindia pic.twitter.com/ZYFjBBFSJr

— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) March 6, 2024
Previous Post

துப்பு கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்..! NIA அதிரடி அறிவிப்பு..

Next Post

விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? TRB ராஜா பதிலடி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? TRB ராஜா பதிலடி.

விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? TRB ராஜா பதிலடி.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஞாபக மறதி நோய் வந்துள்ளது அதனால்தான் இவர் முதல் முதலமைச்சராக இருக்கும்போது பொள்ளாச்சியில் இவளது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட்டாக சேர்ந்து சிறுமிகளையும் ஏராளமான பெண்களையும் கூட்டு பலாத்காரம் செய்தனர் அவர்கள் இன்னும் சிறையில் தான் இருக்கின்றனர் வெளியே வரவில்லை முதலில் பொள்ளாச்சி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட தன் கட்சிக்காரர்கள் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி தரட்டும் பின்னர் இந்த இதேபோன்று பொய்யை பேசட்டும் அதிமுக கட்சிக்காரர்கள் கூட்டு பலாத்காரம் செய்ததோடு அதை வீடியோ எடுத்து இன்டர்நெட்டிலும் வெளியிட்டனர்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In