ராணுவ மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட முன்னாள் விமானப்படை அதிகாரிக்கு ரூ.18 லட்சத்தை உடனடியாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிகிச்சையின் போது அவர் பயணம், தங்கும் செலவுகளை அதிகாரிகள் ஏற்குமாறு உத்தரவிட்டனர்.
ரூ.18 லட்சத்தின் பகுதி இழப்பீடு தவிர, அதிகாரிகள் சிகிச்சைக்காக அவர் டெல்லிக்கு வரும் ஒவ்வொரு வருகைக்கும் (மாதத்திற்கு இருமுறை) ரூ.25,000 செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திற்காக அதிகாரியின் ஊனம் 100 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிக்கு 1.6 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை ஆயுதப்படையினர் கடைபிடிக்காததை எதிர்த்து தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தாக்கல் செய்த மறுஆய்வு மனு நிலுவையில் உள்ளதால், வழக்கு ஜூலைக்கு ஒத்திவைக்கப்பட்டது
2002-ம் ஆண்டு ரத்தம் ஏற்றியதில் ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் விமானப்படை அதிகாரிக்கு மருத்துவ அலட்சியத்திற்காக ₹ 1.54 கோடி இழப்பீடு வழங்க இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகிய இரு நிறுவனங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுபோன்ற தீர்ப்புகளால் தான் நீதி இன்னும் சாகாமல் இருந்து வருகிறது