Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திமுக, அதிமுகவுக்குப் பிறகு பெரிய கட்சி நாதக தான்.. சீமான் ஆவேசம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 4, 2024
in Default
1
திமுக, அதிமுகவுக்குப் பிறகு பெரிய கட்சி நாதக தான்.. சீமான் ஆவேசம்..!
23
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: திமுக, அதிமுகவுக்குப் பிறகு பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்று சீமான் தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சீமான், கர்நாடகாவில் ஒருவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கேட்காமல் அவர்களாகவே வழங்கியதாக கர்நாடகாவை சேர்ந்தவர் கூறியுள்ளார். நாங்கள் 6 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளோம், ஆனால் எங்களுக்கு சின்னத்தை ஒதுக்கவில்லை.

டார்ச் லைட் சின்னத்தை கமலுக்கு ஒதுக்கிய பிறகு தான், எங்களுக்கு இந்த விவகாரம் கவனத்திற்கு வந்தது. 7 சதவீத வாக்குகளை கொண்டுள்ள நாம் தமிழர் கட்சிக்கு தான் கரும்பு விவசாயி சின்ளத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். புதிய சின்னத்தால் நாம் தமிழர் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டது திட்டமிட்ட செயல் என்று குற்றம்சாட்டினார். புலி மற்றும் மயிலுக்கு தேசிய சின்னங்கள் என்று கூறிவிட்டு, பாஜகவுக்கு தேசிய மலரான தாமரையை சின்னமாக ஒதுக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சீமான், ஸ்டேப்ளர் பின், குண்டூசியை எல்லாம் சின்னம் என்றால் எப்படி ஏற்பது? என்று வினவினார்.

8% வாக்கு வங்கியை தொட விடாமல் தடுக்க சதி செய்யப்பட்டுள்ளதாகவும் கடுமையாக சாடினார். கோர்ட்டில் நடக்கும் வழக்கில் என்ன முடிவு வந்தாலும், கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்வேன். சின்னம் ஒதுக்கீடு முறையற்ற வகையில் உள்ளது. எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அதை வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Previous Post

ஆளுநரின் அடுத்த சர்ச்சை பேச்சு : “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற கால்டுவெல்லின் நூல் போலியானது..

Next Post

அடுத்த பாஜக எம்பி தேர்தல் அரசியலில் இருந்து விலகல் : அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அடுத்த பாஜக எம்பி தேர்தல் அரசியலில் இருந்து விலகல் : அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு.

அடுத்த பாஜக எம்பி தேர்தல் அரசியலில் இருந்து விலகல் : அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    சீமான் அவரது கட்சியை பற்றி அவரே பேசி கொள்கிறார் இது அவருடைய சொந்த விருப்பம் மற்றவர்கள் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In