தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பது பெரும் தலைகுனிவு என்றும், இதனை தடுக்காத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளார். டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அவரை தேடி வருகின்றனனர். இதனிடையே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் அதனை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில், 4.3.2024 (இன்று) திங்கட் கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ஆர். இளங்கோவன் அவர்களின் தலைமையில் கழக இளைஞர், இளம்பெண் பாசறை , மகளிர் அணி, மாணவரணி சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் (மாநகராட்சி மைய அலுவலகம் பின்புறம்) நடைப்பெற்றது, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள்,கிளை கழக செயலாளா்கள், சார்பு அணி நிர்வாகிகள், இன்னாள் முன்னாள் ஊராட்சி மன்றம் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள்,துணைதலைவா்கள், கழக பொறுப்பாளா்கள், கழக உறுப்பினர்கள், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் , பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்..


யோவ் போயா டுபுக்கு