மதுரை அரசரடி மாப்பாளைம் அருகில் சுகுணா மஹாலில், “மக்கள் முன்னேற்ற கட்சி” பொதுக் குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் ஜெயவேல் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் ஜெயவேல் கூறுகையில் கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான, கட்சியின் செயல்பாடுகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மற்றும் கூட்டணி அமைத்துப் போட்டியிடவா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். கட்சி நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினார். உடன் மாநிலத் தலைவர் முத்துச்சாமி, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பரத், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments