Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியா கூட்டணியில் இணைகிறதா அதிமுக..? அதிர்ச்சியில் திமுக..!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 1, 2024
in Default
0
இந்தியா கூட்டணியில் இணைகிறதா அதிமுக..? அதிர்ச்சியில் திமுக..!!
65
SHARES
105
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு இழுபறி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சில நாட்களில் காலத்தில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தீவிரமாக நடத்தி வருகிறது. இதில் திமுக ஏற்கனவே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தி வருகிறது. ஏற்கனவே திமுக முஸ்லீம் லீக், கொ.ம.தே.க, கம்யூனிஸ்ட் கட்சி உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதேநேரம் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உடன் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்த போதிலும் இன்னும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்றும் இதற்கான பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும் தகவல் வெளியானது. அப்படி அதிமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தால் அதிமுக நேரடியாக பாஜகவை எதிர்க்கும் “இந்தியா” கூட்டணிக்குள் வரும். ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தைக்காகச் சிலர் தொடர்பு கொண்டுள்ளதாகத் தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இதற்கிடையே அதிமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாகப் போய்க் கொண்டு இருக்கிறது. யூகங்கள் அடிப்படையில் எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கும் கசப்பு வெளிப்பட்டுள்ளது. அந்த கசப்பிற்கான நல்ல மருந்து அதிமுகவிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்றார்.

காங்கிரஸ் உடன் கூட்டணி அமைந்தால் நேரடியாக இந்தியா கூட்டணியில் அதிமுக இடம்பெறுவது தொடர்பான கேள்விக்கு வைகை செல்வன், “அது குறித்து எல்லாம் இன்னும் 2, 3 நாட்களில் நல்ல பதில் கிடைக்கும். கூட்டணி குறித்து வெளிப்படையான பதிலை 2, 3 நாட்களில் நிச்சயம் நாங்களே தருவோம். வரும் நாட்களில் எங்கள் பொதுச்செயலாளர் நல்ல செய்திகளை வரிசையாக அறிவிப்பார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வியூகங்களைத் திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

Previous Post

மராட்டியத்தில் INDIA கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. சரிக்கு சமமாக தொகுதிகளை பிரித்ததால் காங்கிரஸ் உற்சாகம்!!

Next Post

“Dairy milk சாக்லேட்” சாப்பிட தகுதியற்றவை… உணவு ஆய்வகம் அதிர்ச்சி அறிக்கை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“Dairy milk சாக்லேட்” சாப்பிட தகுதியற்றவை… உணவு ஆய்வகம் அதிர்ச்சி அறிக்கை..!

“Dairy milk சாக்லேட்” சாப்பிட தகுதியற்றவை… உணவு ஆய்வகம் அதிர்ச்சி அறிக்கை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In