Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து’ சொன்ன பாஜக, திமுகவின் பதிலடி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 1, 2024
in Default
0
‘ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து’ சொன்ன பாஜக, திமுகவின் பதிலடி..
75
SHARES
121
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பிறந்தநாள் வாழ்த்து என்ற பேரில், பகடியுடன் அவரை இடித்துரைத்திருக்கிறது தமிழக பாஜக. இதனையொட்டி பாஜக – திமுக இடையிலான இணைய மோதல் இன்றைய தினம் சூடுபிடித்திருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளினை முன்னிட்டு இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் பலரும் அரசியல் மாச்சரியமின்றி பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி முதல் புதிய கட்சி கண்டிருக்கும் நடிகர் விஜய் வரை இந்த பட்டியல் நீளமானது. இவர்களின் மத்தியில் தமிழக பாஜக சார்பில் வெளியாகி இருக்கும் பிறந்தநாள் வாழ்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

On behalf of @BJP4Tamilnadu, here’s wishing our Honourable CM Thiru @mkstalin avargal a happy birthday in his favourite language! May he live a long & healthy life! pic.twitter.com/2ZmPwzekF8

— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 1, 2024

சீனாவில் அதிகம் பேசப்படும் மாண்டரின் மொழியில் அந்த வாழ்த்து அமைந்திருப்பதோடு, அதனை பிரதியெடுத்து ஸ்டாலினுக்கான பிறந்தநாள் வாழ்த்துகளை பகிருமாறும் தமிழக பாஜக தரப்பில் கோரப்பட்டுள்ளது. இந்த இடித்துரைப்பின் பின்னணியில் நேற்று முன்தினம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் தளத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்காக, திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழ்கள் வாயிலாக வெளியிட்ட விளம்பர சர்ச்சை இருக்கிறது.

பிரதமர் மோடி – முதல்வர் ஸ்டாலின் படங்கள் பிரதானமாக இடம்பெற்ற அந்த விளம்பரத்தின் பின்னணியில் சில ராக்கெட்டுகளின் படங்களும் இடம்பெற்றிருந்தன. அவற்றில் ஒன்று சீனாவின் கொடியோடும், மற்றொன்று சீன மொழியைத் தாங்கியும் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து பிரதமர் மோடி முதல் அண்ணாமலை வரை இந்த விவகாரத்தை அரசியலாக்கி இடித்துரைத்தார்கள்.

”திமுகவின் இன்றைய விளம்பரம் நகைப்புக்குரியது. அவர்கள் இந்திய அறிவியலையும், இந்திய விண்வெளித் துறையையும் அவமதித்துள்ளனர், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மோடியும், ”அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளிதழ்களில் அளித்துள்ள விளம்பரம், சீனாவுக்கு திமுகவினர் விசுவாசமாக இருப்பதையும், நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலுமாக புறந்தள்ளியிருப்பதையும் காட்டியிருக்கிறது” என்று அண்ணாமலையும் சாடியிருக்கிறார்கள்.

நாளிதழ் விளம்பரம் குறித்தான இணைய பகிர்வு

நாளிதழ் விளம்பரம் குறித்தான இணைய பகிர்வு

இதன் தொடர்ச்சியாகவே இன்றைய தினம், சீனாவின் மாண்டரின் மொழியில் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து பகிர்ந்ததோடு, அதனை பின்பற்றுமாறு பாஜக அபிமானிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பாஜகவினர், ஸ்டாலினுக்கு மாண்டரின் மொழியிலான பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து, அதனை இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நாளிதழ் விளம்பரம் சர்ச்சை எழுந்ததுமே, ”அது படத்தை டிசைன் செய்தவர்களின் அறியாமல் செய்த பிழை” என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், “சீன அதிபர் இங்கே வருகிறார். அவரை இந்திய பிரதமர் வரவேற்க, இருவருமாக மகாபலிபுரத்தில் வாக்கிங் சென்றார்கள். சீனாவை எதிரி நாடு என யாரும் அறிவிக்கவில்லை” என்று தூத்துக்குடி எம்பி கனிமொழி பதிலடி தந்தார்.

சீன அதிபரை சீன கொடியுடன் வரவேற்கும் பொன்.ராதாகிருஷ்ணன்

சீன அதிபரை சீன கொடியுடன் வரவேற்கும் பொன்.ராதாகிருஷ்ணன்

ஆனபோதும், தனது தேர்தல் பிரச்சாரங்களில் தேசியவாதத்தை முன்னிறுத்தும் பாஜக, திமுகவை சீன ஆதரவாளர்கள் என்றும், தேசப்பற்றில்லாதவர்கள் என்றும் இணைய பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. தாமதமாக களமிறங்கிய திமுக அபிமானிகள், பாஜகவின் மாண்டரின் மொழி வாழ்த்தில் உள்ள பிழைகளையும், சீன அதிபரை வரவேற்க பொன்னார் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சீனாவின் கொடியை ஏந்தி நிற்பதையும் வெளியிட்டு பதில் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

Previous Post

“திமுக காணாமல் போகும் என சொன்னவர்கள்தான் காணாமல் போய் உள்ளார்கள்” – உதயநிதி ஸ்டாலின் கலகல..

Next Post

மதுரையில் ரூ90 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுரையில் ரூ90 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்..!

மதுரையில் ரூ90 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In