Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காங்கிரஸில் இணைந்த அசோகன்.. விலகும் நிர்வாகிகளால் ஆட்டம் காணும் தமாகா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 29, 2024
in Default
0
காங்கிரஸில் இணைந்த அசோகன்.. விலகும் நிர்வாகிகளால் ஆட்டம் காணும் தமாகா!
50
SHARES
80
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என தெரிகிறது. தேர்தல் ஆணையம் மார்ச் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளன.

அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என்று உறுதியான நிலையில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன. மேலும் பாமக, தேமுதிக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் சமீபத்தில் அறிவித்தார். ஜிகே வாசனும் அண்ணாமலையும் இணைந்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். ஜிகே வாசன் தங்களை வழிநடத்துவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ஜிகே வாசன், பாஜகவுடன் கூட்டணி அறிவித்ததுமே அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

மரியாதை நிமித்தமாகவே அவரை எடப்பாடி பழனிசாமியை சந்தித்தாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து தமாகா தலைமை நிலைய செயலாளரான அசோகன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததை கண்டித்து அவர் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அசோகன், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் அசோகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். முன்னதாக நேற்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் இணைந்தனர்.

பாஜகவுடனான கூட்டணியை எதிர்த்து அக்கட்சியின் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது. அப்போதும் அந்த கூட்டணியில் தமாகா இடம் பெற்றிருந்தது. அதனை அக்கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் தற்போது அதிமுக இல்லாத பாஜக தலைமையிலான கூட்டணியை ஏற்க தமாகா தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக பேசப்பட்டது. இந்நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதுதான் தமாகா நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Previous Post

மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து… த்ரிஷா வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Next Post

பாஜக விளம்பரத்தில் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி.. திமுக விளம்பரத்தில் சீனா கொடி.. எங்கே நடந்தது தவறு?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக விளம்பரத்தில் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி.. திமுக விளம்பரத்தில் சீனா கொடி.. எங்கே நடந்தது தவறு?

பாஜக விளம்பரத்தில் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி.. திமுக விளம்பரத்தில் சீனா கொடி.. எங்கே நடந்தது தவறு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In