Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ககன்யான் திட்டம்: விண்வெளி செல்லும் இந்திய வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 27, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ககன்யான் திட்டம்: விண்வெளி செல்லும் இந்திய வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர்
30
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவனந்தபுரம்: ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், பிரதாப், கிருஷ்ணன், சுபன்சூ சுக்லா ஆகியோர் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டங்களை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ, தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத், பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, கவர்னர் முகமது ஆரிப் கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து கவுரவித்தார். இதன்படி விமானப்படை குரூப் கேப்டன் பிரசாந்த் நாயர், பிரசாத், கிருஷ்ணன், சுபன்சூ சுக்லா ஆகியோரை நேரில் அறிமுகம் செய்து பிரதமர் கவுரவித்தார். அவர்களுக்கு அடையாள பட்டையையும் வழங்கினார்.

.

Previous Post

போதை ஸ்டாம்ப் விற்ற வழக்கு: கேரள மாணவரிடம் விசாரணை

Next Post

ஹைதராபாத் ஓட்டலில் போதைபொருள் பயன்பாடு: பாஜக தலைவரின் மகன் கைது.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹைதராபாத் ஓட்டலில் போதைபொருள் பயன்பாடு:  பாஜக தலைவரின் மகன் கைது.

ஹைதராபாத் ஓட்டலில் போதைபொருள் பயன்பாடு: பாஜக தலைவரின் மகன் கைது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In